Posts

CAA - இவ்வளவு பதட்டம் ஏன் ? உண்மையில் சொல்லப்போனால் தேசம் இப்போது ஒரு போராட்டக்களமாக மாறிப்போயிருக்கிறது . இதன் பின்னணி என்ன ? இந்த போராட்டங்கள் தேவை தானா ? கொஞ்சம் உணர்வுகளை ஓரம் வைத்து விட்டு அறிவுபூர்வமாக இதை அணுகி பார்ப்போம் . CAA - அதாவது - குடியுரிமை திருத்தச் சட்டம் சொல்லுவது என்ன ? சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் பாகிஸ்தான் , பங்களாதேஷ் , ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று தேசங்களில் இருந்து வந்துள்ள அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டமாகும் . மேலோட்டமாக பார்த்தால் இந்த சட்டம் எந்த விதமான முரணும் இல்லாததாக தோன்றினாலும் - அதில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு ஷரத்துக்களும் , இந்த சட்டத்தோடு தொடர்புடைய மற்றொரு சட்டமும் தரும் அச்சம் தான் இந்த போராட்டத்திற்கான காரணமாக உள்ளது . அவை 1. இந்த சட்டம் அகதிகள் என்ற வரையறையில் இஸ்லாமியர்களை விலக்கி வைக்கிறது . 2. இந்த சட்டம் குறிப்பிட்ட 3 தேசங்களை மட்டும் கணக்கில் கொள்கிறது 3. இதற்கு முன்னால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள NRC - அதாவது தேசிய குடியுரிமை கைய